இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை விட கடுமையானதாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழிநுட்பம் மூலமான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்கள் இயக்குநர் ஏ.எம்.பாயிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதன்போது மனோ கணேசன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் முதலில் மிருசுவில் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்திருந்தார்.
இது ஒரு கடுமையான நடவடிக்கையாகும். இதன்மூலம் தான் யார் என்று காண்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.