யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது.
வி. மணிவன்ணன் உள்ளிட்ட சிலர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து விலக்கப்பட்டனர். அதன் பின்னர் சுயாதீனமாக செயற்பட்டார்கள். அவர்கள் கட்சியினால் விலக்கப்பட்டதை உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம், முன்னணி கடிதம் மூலம் அறிவித்து.
இதன்படி, அவர்கள் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக, உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
இதற்கு எதிராக வி.மணிவன்னண், நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கு விசாரணை முடிவடையும் வரை, கட்சியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்தும் விலக்குவதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த உத்தரவை தடைசெய்து, மணிவண்ணன் தரப்பினர் உள்ளூராட்சி சபையிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிசெய்ய கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.