“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.”
ஜேர்மனியின் தெற்காசிய விவகாரங்களிற்கான மனித உரிமைகளிற்கான செயலாளர் போர்பெல் கோஃப்லர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்,
The report published by @UNHumanRights yesterday is cause for grave concern about the situation of human rights in #SriLanka . I am pleased that Germany remains committed to reconciliation and accountability, also through the #HumanRightsCouncil.
— Bärbel Kofler, MdB (@BaerbelKofler) January 28, 2021
இந்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஜேர்மனி உறுதியுடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.
அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்கு தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.