பாணந்துறை – பள்ளிமுல்ல பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி, பாணந்துறை – ஊரகட்டுவ தொட்டுபொல அருகில் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் காவல்துறை சுழியோடிகள் இணைந்து நேற்றைய தினம் குறித்த உந்துருளியை மீட்பதற்கு பொல்கொட கங்கையில் தேடுதல்களை முன்னெடுத்திருந்த போதிலும் அதனை மீட்க முடியாதிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், குறித்த உந்துருளியை மீட்பதற்கு உதவுமாறு பிரதேச இளைஞர்களிடம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, பிரதேச இளைஞர்கள் இணைந்து இன்று முற்பகல் குறித்த உந்துருளியை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.