தமிழகத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் ரோஸ்மியபுரம் என்னும் ஊரில் ஹெர் மைன்ஸ் எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்துவந்துள்ளது.
கடந்த 25 – ம் திகதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்துள்ளனர். அதை எதிர்பாராத விதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டார். இதனையடுத்து, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கடுமையாகத் தாக்கப்பட்ட ராஜம்மாள் அங்கிருந்து தப்பியோடி ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த பொலிசார் ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், முதிய பெண்களிடமும் பாதிரியார் தகாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜம்மாள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.