கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவர் சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவரின் மனைவி அமராவதி (35). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.
இதனையடுத்து, இந்த தம்பதியருக்கு இதுவரையும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அமராவதி சில நாட்களாகவே மிகுந்த மனவருத்ததில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், பிரபு காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பிரபுவின் தாயார் மருமகள் அமராவதியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் சென்ற அவர், அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அமராவதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
மேலும், உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் நடத்திய சோதனையில் இறப்பதற்கு முன் அமராவதி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில், எங்களுக்கு திருமணமாகி 2 வருடமாகியும் குழந்தை இல்லை. இதனால் மன வேதனைக்கு ஆளாகிய நான், வாழப்பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



















