ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிசேல் பெஷலே பிரிவினைவாத புலிகள் அமைப்பின் கைப்பாவை என அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் கடற்படையில் கடமையாற்றிய சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளமைக்கு குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே அவர் அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் சிவில் உரிமையை இரத்துச் செய்ய மனித உரிமை ஆணையாளர் யோசனை முன்வைக்கின்றார் என்ற கேள்வி நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
சரத் வீரசேகர கடந்த பொதுத் தேர்தலில் 3 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய மக்கள் ஆணை.
சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் தமிழ் பிரிவினைவாதிகளால் கடந்த 12 ஆண்டுகளாக போர் குற்றத்திற்கான சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை.
இப்படியான பின்னணியிலேயே மனித உரிமை ஆணையாளர் போர்க் குற்றவாளி என சவேந்திர சில்வாவை கூறுகிறார். கடந்த அரசாங்கம் அவரை இராணுவ தளபதியாக நியமிக்கும் போது அது நல்லது.
எமது காலத்தில் அவர் இராணுவ தளபதியாக செயற்படுவது கெடுதியானது. இது மனித உரிமை ஆணையாளரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்படும் யோசனையை முற்றாக நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததை நாங்கள் தலை வணங்கி வரவேற்கின்றோம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.