டெல்லியில் 2 வயது ஆண் குழந்தையை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு தம்பதி தங்கள் 2 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றனர். அவர்களுடன் வீட்டில் உதவிக்காக 16 வயது சிறுவனை வேலைக்கு வைத்திருந்தனர். அவன் அதே வீட்டில் தங்கிவந்துள்ளான்.
கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம்கேட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் தங்கள் அறையிலிருந்து குழந்தையின் அறைக்கு வந்து பார்த்துள்ளனர்.
ஆனால் அந்த அறைக்குள் இருந்த சிறுவன் உள்பக்கமாக தாழ்பாள் போட்டுள்ளான். குழந்தையின் தந்தை கதவை திறக்கும்படி மிரட்டிய பிறகு கதவை திறந்துள்ளான்.
அப்போது, குழந்தையின் உடம்பில் அந்தரங்கப் பகுதிகளிலிருந்து இரத்தம் வருவதைப் பார்த்த தாய் மிரண்டு போனார். அதே சமயம் சிறுவன் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டான்.
பின்னர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, குழந்தையின் தந்தை பொலிஸில் புகார் அளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, அச்சிறுவன் 2 வயது குழந்தை என்றும் பாராமல் தகாத முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான் என்பது தெரியவந்தது.
புகாரின் அடிப்படியில் சிறுவனை வலைவீசி தேடிய பொலிஸ், டெல்லி ரெயில் நிலையத்தில் அவனை கைது செய்துள்ளனர். அவனை விசாரிக்கையில், மொபைல் போனில் தவறான படங்களைப் பார்த்துவிட்டு இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.
பின்னர் அவன் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.