இரண்டு லட்சத்து 50ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5 இலட்சம் கொரொனா தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு நிலையில் முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு அவற்றை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் 4 முதல் 6 வார இடைவெளியில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 12 வாரங்களில் பலனை பெறக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















