முதலாம் தரத்தில் இணைந்துக்கொள்வதற்காக தனது பாட்டியுடன் பாடசாலை சென்ற மாணவரொருவர் பதுளை நகர எரிப்பொருள் நிலையத்திற்கு முன்பாக பாரவூர்தி ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாலயத்தின் முதலாம் தரத்தில் மாணவராக இணைந்துக்கொள்ள சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அசேலபுர பகுதியை சேர்ந்த 6 வயதுடையவர் என காவல்துறை குறிப்பிட்டது.
சம்பவத்தில் காயமடைந்த பாட்டி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


















