திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் இரூர் பெருமாள் கோவில் பகுதியை சார்ந்தவர் முத்து (வயது 40). இவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பேத்தியின் பிறந்தநாளை கொண்டாட அங்குள்ள சி.ஆர் பாளையத்திற்கு சென்றிருந்த நிலையில், மீண்டும் இரூருக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
இதன்போது, அங்குள்ள பைந்தமிழ் தோட்டம் பகுதியருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், முத்துவை வழிமறித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தில் முத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ” முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும், சி.ஆர் பாளையம் பகுதியை சார்ந்த ஒருவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் பழக்கம் காரணமாக, மகாலட்சுமி தனது கணவரை கொலை செய்ய கூலிப்படையை ஏவியது உறுதியானது ” என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள மகாலட்சுமி மற்றும் கூலிப்படை கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.