எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்வில் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் புதிதாக கொண்டுவர இருக்கும் நகல் தீர்மான வரைபு வெளிவந்துள்ள நிலையில் அது குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன், குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வரைபு தயாரிப்பதற்கு பொறுப்பாக இருந்த “பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டனீக்ரோ , மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.