நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக, தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் 75,842 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
தற்போது 4 ஆயிரத்து 225 பேர் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.