நாட்டில் 70 வீதமானோருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டால் கோவிட் வைரஸ் இலங்கையிலிருந்து அழிந்துவிடும் என வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், எப்போது கோவிட் வைரஸ் இல்லாமல் போகும் என்பதற்கு விளக்கமளிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், அதன் பின்னர் வைரஸ் இருப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். காரணம் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால் இந்த வைரஸ் எங்கு செல்வது என்ற இடங்களை தேடி கொண்டிருக்கும்.
ஆனால் வைரஸ் தானாக எங்கும் செல்லமுடியாது. மக்கள் ஊடாகவே செல்ல முடியும். 30 வீதமானோர் தடுப்பூசி பெறாவிடினும் அந்த 30 வீதமானோரை இந்த வைரஸ் சென்றடைவது மிகவும் கடினமாகும்.
அப்படியான சந்தர்ப்பத்தில் படிப்படியாக இலங்கையிலிருந்து அழிந்துவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்ட பின்னர் சுகாதார அறிவுறுத்தல் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.