யாழ்ப்பாணத்தில் தமது குழந்தையைத் தாக்கிய பெண் மீது கொலை குற்றச்சாட்டைச் சுமத்த முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் குற்றவியல் தண்டனைக்கோவையின் 300, 308 மற்றும் 308ஏ இன்படி இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும்.
இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் குறித்த பெண்ணுக்கு 20 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
இதேவேளை தாயினால் தாக்கப்பட்ட குழந்தை, சிறுவர் பாதுகாப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


















