நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உட்பட ஆயுதப்படைகளின் முதன்மைப் பொறுப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (05) முற்பகல் காட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வர்ண விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
மனிதநேயத்தின் மதிப்பை அங்கீகரிக்கும் உண்மையான சர்வதேச ஒத்துழைப்பு மூலம் எல்லைகளை கடந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிக்கலான உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை வெற்றிகொள்ள நன்கு தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவை அலங்கரிப்பதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு விமானப்படை வீரர்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், நாடுகளுக்கிடையிலான நட்புறவு இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவதாகவும் அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.