வெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குடிபோதையில் சாரதி வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இரவுநேர களியாட்ட விடுதியில் மது அருந்திய நபர்களால் வாகனம் செலுத்தப்பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி உட்பட அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


















