கனேடிய இராணுவத்தின் மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய இராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தற்போது, Alexandra Auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் இராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தியதாக திடுக்கிடவைக்கும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
198 ஆண்களுடன் இரண்டே பெண்கள் இராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், என்னால் இதற்கு மேல் விளக்கமாக சொல்ல முடியாது, ஆனால் அது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்று கூறுகிறார் Alexandra.
மற்றொரு தருணத்தில் மூத்த அதிகாரி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக, அவரைத் தள்ளிவிட்டு விட்டு தான் அங்கிருந்து தப்பியதாகவும் தெரிவித்துள்ளார் Alexandra.
அது குறித்து மேலதிகாரி ஒருவரிடம் புகாரளிக்கமுயன்றபோது, உன்னிடம் DNA ஆதாரம் உள்ளதா? சாட்சியம் உள்ளதா? என்று அவர் கேட்க, இவர் இல்லை என்று பதிலளிக்க, உனக்கு வேலையில் தொடரவேண்டுமானால், வாயை மூடிக்கொண்டு வேலையைப் பார் என்று அவர் கூறியதாகவும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் Alexandra.
கனேடிய இராணுவம், ஏற்கனவே இரண்டு பாலியல் புகார்களால் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருகிறது.
Gen. Jonathan Vance என்ற இராணுவ அதிகாரி மீது, அவர் முறைதவறி நடந்துகொண்டதாக அவரது இரண்டு சக பெண் ஊழியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள். Adm. Art McDonald என்ற இராணுவ உயர் அதிகாரி தன் மீதான குற்றச்சாட்டுகளால் பதவி விலகியிருக்கிறார்.
இந்நிலையில் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள Alexandra, இப்போதாவது நடவடிக்கை எடுக்குமாறும், அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ள ஒரு விடயமாக, முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.