பொதுவாக இன்றைக்கு பலரும் சிறுநீரகப்பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமே தண்ணீர் போதியளவு குடிக்காது தான்.
சிறுநீரகத்தில் சேரக்கூடிய அதிகப்படியான கனிம சத்துக்களும், உப்பும் கற்களாக மாறிவிடும்.
இந்த கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே இருக்கும் போது எந்த ஒரு அறிகுறியையும் வெளிபடுத்தாது. ஆனால், இது சிறுநீரகப் பாதையை நோக்கி நகரும் போது அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
சிறுநீரக கற்கள் உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட சிறுநீர கற்களை ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில் தற்போது எந்த உணவுகள் சிறுநீரக கற்களை ஏற்படுத்து என பார்ப்போம்.
- மாட்டிறைச்சியில் புரோட்டீன் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் உள்ளது. யூரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுப் பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
- கார்போனேட்டட் பானங்களான சோடா மற்றும் எனர்ஜி பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் அதிக அளவில் உருவாகும். சோடாக்களில் சிறுநீரக கற்களை உருவாக்கும் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் அதிகம் உள்ளது. எனவே இப்பானங்கள் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்.
- சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான வெள்ளை சாதம், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதர உணவுப் பொருட்கள் இன்சுலின் அளவை அதிகரித்து, சிறுநீரக பாதையில் தொற்றுக்களை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, சிறுநீரக கற்கள் உருவாவதற்கும் தூண்டும்.
- காப்ஃபைனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். மேலும் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால் காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிக அளவில் எடுக்காதீர்கள்.
- செயற்கை இனிப்புக்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். மேலும் செயற்கை இனிப்புக்கள் கலக்கப்பட்ட பானங்களை அதிக அளவில் குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பது.
- ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்து வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும். முக்கியமாக ஆல்கஹால் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைக் குறைத்து, சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
- உப்பில் சோடியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.