ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை கைப்பற்றாமல் கடனை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிதியமைச்சில் இன்று வங்கி பிரதானிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழில் முயற்சியாளர்களின் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண நிதியமைச்சு , மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகள் ஒன்றினைந்து ஒருமித்த கொள்கையடிப்படையில் செயற்படுவது அவசியாகும்.
வங்கி சேவையில் இவ்வாறான பிரச்சினைநெடுகாலமாகவே காணப்படுகிறது. ஆகவே இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அவசியமானதாகும்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம், கொரோனா தாக்கம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இவ்வாறானவர்களின் சொத்துக்களை கைப்பற்றாமல் அவர்கள் கடளை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குவது குறித்து வங்கி பிரதானிகள் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.