இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. புதிய பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் மத்திய-மாநில அரசுகள் அதிர்ச்சியடைந்து உள்ளன.
இந்த நிலையில் மக்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடருமாறு ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் தனது ருவிட்டர் தளத்தில், “ஏற்கனவே எச்சரித்தது போல கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தயவுசெய்து தொடருமாறு கேட்டுக்கொளகிறேன். முககவசம் அணிந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் படிப்படியாக தொற்று அதிகரித்து வருவதை குறிக்கும் வரைபடம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.