ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா விலகியிருந்தமை இலங்கைத்தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைகாங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கியிருந்தமை தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம் மற்றும் மாபாதகச் செயலாகும்.
மத்திய அரசின் பச்சைத் துரோகத்திற்குத் தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்