பதுளையின் பசறை-13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தமது பெற்றோரை இழந்துள்ள மூன்று குழந்தைகளை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ பொறுப்பேற்பதற்கு முன்வந்துள்ளார்.
9 வயது, 8வயது, 3 வயதையுடைய மூன்று பிள்ளைகளையே மேற்படி வைத்தியர் தனது மனைவு சகிதம் பொறுப்பேற்கவுள்ளார். வைத்தியரின் இந்த கோரிக்கை தொடர்பில் பசறை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இன பேதமின்றி தாம் குழந்தைகளை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கோரிக்கை குழந்தைகளின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டபோதும் அவர்களை தாமே வளர்க்கப்போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் தமிழ் பிள்ளைகளை தயாள உள்ளத்துடன் எவ்வித பேதமுமின்றி சிங்கள வைத்தியர் ஒருவர் பொறுப்பேற்க முன்வந்தமை பெருமைக்குரிய ஒன்றாகும் என பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


















