முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.
உலக உரிமையான சிங்கராஜ வனம் உட்பட மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் உட்பட சுற்றாடல் மற்றும் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான தேசிய கொள்கை குறித்தே அவர் அறிக்கையை வெளியிடவுள்ளார்.
சிங்கராஜ வனத்தைப் பாதுகாக்கும் பசுமை வருடம் என்ற அறிக்கையையும் இதன்போது ரணில் வெளியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை வர்ணத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாடு முழுவதும் வனங்கள் உட்பட சுற்றாடலை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அமையும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் எவரும் அழுத்தங்களை கொடுக்க முடியாத படி சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்குவது குறித்தும் ரணில் விக்ரமசிங்க தனது விசேட அறிக்கையில் குறிப்பிடவுள்ளதாக கூறப்படுகிறது.