ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறப்பு செய்தியை கேட்டு பேரதிர்ச்சி அடைந்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த, மன்னார் மறை மாவட்ட முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
ஈழமண்ணில் போர் நடக்கும் போது தேவாலயங்களை மக்களின் புகலிடமாக்கி பாதுகாத்தார்.
மேல்குகலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களின் புலம்பெயர்தலுக்கு உதவி புரிந்ததோடு பல உதவிகளை வழங்கி மக்கள் மனங்களில் மாமனிதராக உயர்ந்த அவரின் அரும்பணி போற்றுதலுக்குரியது.
அவரின் மரணம் தமிழினத்திற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார்,
சீமானின் முழு அறிக்கை,
ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த, மன்னார் மறை மாவட்ட முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம். pic.twitter.com/q8mGS0H0mh
— சீமான் (@SeemanOfficial) April 2, 2021