குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலைக்கு சேதம் விளைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் வாரியபொல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் திலீப் குமார் (வயது-47) என்பவரே உயிரிழநந்துள்ளார்.
இந் நிலையில் அவரது உடல் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக குருணால் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.