உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் ராஜபக்ச அரசு தோல்வி கண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி மீது பழி சுமத்துவதை தவிர்த்து – அதன் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர்.
நௌபர் மௌலவி சஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்தச் சந்தர்ப்பத்திலும் சஹ்ரானின் தலைவராகச் செயற்படவில்லை. அவர் இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தார் என்பதற்கு எவ்வித சாட்சியும் இல்லை.
எவ்வாறிருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தடுக்க முடியாமல் போனது.
2015 க்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்துடன் சஹ்ரான் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இது தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படாமல் அரசாங்கம் போலியாக செயற்படுகிறது என்றார்.