இலங்கை இராணுவ அதிகாரிகள் 28 பேர் போர் குற்றங்களை செய்தனர் என்பதற்கான சாட்சியங்களை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு வழங்க விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பட்டாளர்கள் 357 முன்வந்துள்ளதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் தலைவர்கள் சிலர் இருப்பதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
போர் குற்றங்களுக்கான சாட்சியங்களை பெறும் அலுவலகம், ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அலுவலகத்திற்கு 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சாட்சியமளிக்க முன்வந்துள்ள சாட்சியாளர்களின் அடையாளத்தை வெளியிடுவதை மனித உரிமை பேரவை தடை செய்துள்ளது எனவும் அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
போர் குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட நபர்களை கூட சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.