இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க பல்வேறு நாடுகளும் முன்வந்திருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும், ஆனால், நோய் பரவலுக்கான அபாயம் முற்றாக நீங்கிவிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து மக்கள் கூடுதலாக நடமாடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
திருமண நிகழ்விலும், இறுதிக் கிரியைகளிலும் கூடுதலான நேரம் தங்கியிருக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது என்றும் குறிப்பிட்டார்.