தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்பாடுகளை அதிகரிக்க தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல கட்ட முயற்சிகளை எடுத்து வந்தாலும் பயனளிக்கவில்லை.
- தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று மட்டும் 2,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 4,176 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 8,91,839 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 95,387 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
- இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,08,79,495 ஆக உள்ளது. மேலும், தற்போது 58,097பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.