சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை வவுனியா – ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று (16) திறந்துவைக்கப்பட்டது.
ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக் கட்டடத்தை திறந்துவைத்தார்.


















