இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று தாக்கமானது திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் மாத்திரம் 357 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 260 பேர் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,796ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.