மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து குறித்த கஞ்சா வியாபாரியான பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்த நிலையில் 1260 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 45 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண்ணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.