இன்று காலை ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான இஷினோமகிக்கு தென்கிழக்கில் 45 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளியாக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 63 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ஆராய்சி மையம் தகவல் வழங்கியுள்ளது. .
மேலும் இந்த நிலநடுக்க ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




















