கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்று நமது பெரியவர்கள் கூறுவதுண்டு.
உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, பி2, பி6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன.
எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. இருப்பினும் இதனை அடிக்கடி எடுக்க கூடாது. ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் அகீரை வகைகளை நாம் அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம், நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து , அது நமது குடல் பகுதிகளில், ஆக்சலேட்களாக மாறி விடுகின்றன. இத்தகைய உப்புகள், கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி விடுவதால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இத்தகைய உணவு வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால், அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இது சிறுநீரக கற்கள் தோன்றுவதின் ஆரம்ப நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
கீரை வகைகளில், அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் தீமை பயப்பவையாக உள்ளன.
குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

நமது உணவில், அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது.
கீரை வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், அது செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது. இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.
குறிப்பு
மதிய உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், மாலைநேரத்தில், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரவு உணவில், கீரை வகைகளை எடுத்துக் கொண்டால், இரவு நேர உறக்கம் சிறப்பானதாக இருக்கும். டிக்கடி கீரை சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.




















