இன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலாலும், நமது இரத்தத்தில் நிறைய நச்சுக்கள் சேர்கின்றன.
அதோடு உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிந்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
ஒருவரது இரத்தத்தையும், இரத்த நாளங்களையும் சுத்தம் செய்தற்கு ஏராளமான உணவுகள் உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது இரத்தக்குழாய்களை சுத்தம் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
பூண்டில் நிறைய ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இது இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல்
பாதுகாக்கிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
அல்லது பூண்டினை, சூப், சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
தினமும் ஒன்று முதல் இரண்டு மாதுளைகளை தினமும் சாப்பிடலாம். அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட
மாதுளை ஜீஸை தினமும் பருகலாம். இது இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது.
தினமும் இரண்டு முதல் மூன்று கப் க்ரீன் டீ பருகுவது ஆரோக்கியமாக இருக்க உதவும். இது இரத்த குழாயை
சுத்தம் செய்துவது மட்டுமில்லாமல் அவற்றை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் உதவுகின்றன. இது இருதய
நோய்
பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகின்றன.
தினமும் அரைகப் அளவாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரைகளில் நைட்ரிக் ஆக்சைடு
உள்ளது. இதில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இதில் பொட்டாசியம், போலிக் அசிட் ஆகியவை உள்ளன.
தினமும் அரை அவோகேடாவை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இது இரத்தத்தில் உள்ள எல்.டி.எல்
அளவை குறைத்து, எச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது.
இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது.



















