பொதுவாக கர்ப்பகாலத்தில் பெண்கள் உணவில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் உணவில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பான உணவாக மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும், கர்ப்பகாலத்தில் நட்ஸ் வகைகள் ஆரோக்கியமானவை என்பார்கள் அந்த வகையில் முந்திரி பருப்புகள் ஆரோக்கியமானதா என்று பார்க்கலாம்..
முந்திரி வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சிக்கு உதவும். இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான மூலம். முந்திரி நேரிடையாக எந்தவிதமான இரசாயனங்களையும் பயன்படுத்தாமல் பெறப்படுவதால் இது சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கொண்டுள்ளது.
மேலும், கர்ப்பகாலத்தில் நன்மை பயக்கும் ஸ்க்வாலின், பைட்டோஸ்டெரால்ஸ், டோகோபெரோல்கள் போன்றவை முந்திரியில் உள்ளது.
கர்ப்பகாலத்தில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு வரை சாப்பிடலாம் என்பதை தெரிந்துகொள்வோம். முந்திரி பருப்பில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளது.
ஆஸ்திரேலிய உணவு வழிகாட்டுதல்களின் படி நாள் ஒன்றுக்கு 30 கிராம் வரை முந்திரி எடுக்கலாம். அதாவது 15 முந்திரி வரை எடுக்கலாம். முந்திரி சாப்பிடுவதற்கு முன்பு ஒவ்வாமை பரிசோதனை செய்வதன் மூலம் பக்கவிளைவுகளை முன்கூட்டியே அறிந்து தவிர்ப்பது நல்லது.
முந்திரி கொட்டைகள் இரும்புச்சத்துக்கான நல்ல மூலம் ஆகும். இது சிவப்பு ரத்த அனுக்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் சோர்வு மற்றும் இரத்த சோகைக்கு எதிராக போராடுகிறது.
கர்ப்பத்தில் முந்திரி பருப்பை எடுத்துகொள்வது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக கர்ப்பகாலத்தில் நீரிழிவு வரக்கூடும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அது மலச்சிக்கலை தடுக்க உதவக்கூடும்.
முந்திரி பருப்புகள் வைட்டமின் கே நல்ல மூலமாகும். இது கர்ப்பிணி பெண்களில் இரத்த உறைதலை ஊக்குவிக்கிறது . புதிதாக பிறக்கும் குழந்தைக்கு ரத்தக்கசிவு நோய் எனப்படும் இரத்தப்போக்கு கோளாறு ஏற்படும் அபாயத்திலிருந்து கருவை தடுப்பது அவசியம்.
இந்த கொட்டைகள் பொட்டாசியம் நிறைந்தவை என்பதால் இது உப்பின் பாதகமான விளைவை நடுநிலையாக்குவதன் மூலம் இரத்த அழுத்த அளவை பராமரிக்க செய்கிறது.