எட்டு வயதான எலிசா டெடி, 2019 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில் ஒருவர், எனினும் அவர் தனது கண்பார்வை இழந்துள்ளார்.
அதிஷ்டமிக்க அந்த நாளில், எலிசா தனது பெற்றோருடன் காலை நேர பிரார்தனைகளுக்காக தேவாலயத்திற்கு விஜயம் செய்தார். இந்த தாக்குதலின் போது அவரது பெற்றோர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு செயின்ட் மேரி கல்லூரியின் மாணவியான எலிசா தற்போது அத்தை ஒருவரின் கண்காணிப்பில் இருக்கின்றார்.
இந்நிலையில், சியோன் தேவாலய பாதிரியார் மூலம், கொழும்பு ஊடகம் ஒன்று எலிசாவின் அத்தையை தொடர்புகொண்டது.
இதன்போது, எலிசா தனது கண்பார்வையை மீண்டும் பெற இந்தியாவில் ஒரு மருத்துவமனையில் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அத்தை தெரிவித்துள்ளார்.
“அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எங்களுக்கு நிதி ஆதாரங்கள் இல்லை.” என்று அத்தை கூறினார். எலிசா தனது பெற்றோர் மற்றும் பார்வையை இழந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது.
எனினும், பயப்படாமல், எலிசா தனது படிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளார் என்று அவரது அத்தை கூறினார்.
எலிசாவின் தாய் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், அதே நேரத்தில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு வாரம் கழித்து உயிரிழந்துள்ளார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.