• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை! – யழ். அரசாங்க அதிபர்

Editor1 by Editor1
May 14, 2021
in இலங்கைச் செய்திகள்
0
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை! – யழ். அரசாங்க அதிபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று நாட்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயண கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 67 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட சில நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

அந்த வகையில் நேற்று இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை கொரானா ஒழிப்பு மத்திய நிலையத்தினால் பயணதடை விதிக்கப்பட்டுள்ளது, இந்தப் பயணத் தடை காலத்தில் பொது போக்குவரத்து முற்றாக தடை படும், கடைகள் மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு இருக்கும்.

ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் இந்த பயணத் தடை காலத்தில் பலர் தமக்கு ஊரடங்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுகின்றார்கள், பொதுமக்கள் ஒரு விடயத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த பயணத்தடை என்பது பொதுமக்கள் இந்த நிலமையினை அனுசரித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இந்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதனால் வெளியில் சகல நடவடிக்கைகளும் செயலிழந்து காணப்படும். எனவே பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய தேவை இருக்காது. அரசு அலுவலகங்கள் இயங்காது, பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது.

எனவே இந்த மூன்று நாட்களும் பொதுமக்களில் வீடுகளில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தோடு வைத்திய சேவை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் செயற்படும். வைத்தியசாலைக்கு அல்லது அத்தியாவசியமான சேவைக்கு வெளியில் செல்வோர் பயண கட்டுப்பாட்டுடன் சென்று வர முடியும்.

மேலும் அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளி மாகாண போக்குவரத்தில் ஈடுபடுவோர் அதாவது உணவுப்பொருட்கள் எரிபொருள் காஸ், அவர்கள் ஏற்கனவே உரிய முறையில் விண்ணப்பித்து பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு என வழங்கப்பட்டுள்ள அனுமதியினை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

தற்பொழுதுள்ள இந்த இடர் நிலைமையினை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் மட்டத்திலும், பிரதேச செயலர்கள் பிரதேச குழுக்கள் ஊடாக தற்போதுள்ள நிலைமையினை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார்கள். குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள்.

அந்த வகையிலே பிரதமர் அலுவலகம் ஒருவிசேட வேண்டுகோளை விடுத்துள்ளது, கடந்தமுறை ஊரடங்கு நேரத்தில் பின்பற்றிய நடைமுறையை போன்று இந்த நிலைமையிலும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி பிரதேச மட்டங்களில் அந்த நிலைமை செயற்படுத்தப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி அதேபோல் நாவற்குழி நெற்களஞ்சியம் போன்றன இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் நாவற்குழி நெற்களஞ்சியத்தினை சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. நாவற்குழி நெற்களஞ்சியத்தை சிகிச்சை நிலையமாக மாற்றினால் அதில் 650க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியும்.

அத்தோடு வட்டுக்கோட்டையிலே 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனைவிட வடக்கு சுகாதாரப் பிரிவினர் 4 ஆதார வைத்தியசாலைகளை அதாவது தெல்லிப்பளை, பருத்தித்துறை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி இந்த நான்கு ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியினருடன் சுகாதார பிரிவினர் வடக்கில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது, இந்த நிலைமை ஒரு சவாலான நிலைமையாக காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இந்த சுகாதார கட்டுப்பாடுகளை மிகவும் அனுசரித்து தற்போது உள்ள அபாய நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும் .

மேலும் இந்த நிலையிலே போக்குவரத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்திற்கு பொதுமக்கள் அனுமதி கோருவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணங்களை மட்டும் படுத்திகொள்ளுங்கள்.

அத்தோடு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி அவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்ளலாம், அத்தோடு அலுவலகங்களுக்கு செல்வோர் தமது அடையாள அட்டையைக் காட்டி தமது பயணங்களைப் தொடரமுடியும்.

அத்தோடு தமது வடபகுதியை பொருத்தவரைக்கும் ஒரு பெரிய சவாலான விடயம் காணப்படுகின்றது, அதாவது சட்டவிரோதமான முறையில் எமது அயல் நாட்டிலிருந்து எமது பகுதிக்கு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது, பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் அந்த நிலைமை அனுசரிக்கப்படாத நிலைமை கவலை அளிக்கின்றது.

எனவே பொதுமக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பாதிப்பினை ஏற்படுத்த முன்வராது, தமது குடும்பத்தையும் சமூகத்தையும் எமது மாவட்டத்தினை தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் .அத்தோடு உங்களுடைய பகுதி கிராம சேவகர் மற்றும் அப்பகுதி அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொற்றிலிருந்து உங்கள் பகுதியினை பாதுகாக்கவேண்டும்.

எனவே இந்த பயண கட்டுப்பாடானது தொற்றினை கட்டுப்படுத்துவதற்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள், கைதுகள் இடம்பெற்றுவருகின்றன.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு எதிராக செய்யப்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து தம்மையும் தமது மாவட்டத்தினையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!

Next Post

தென்கிழக்கு அரேபிய கடலுக்குள் செல்ல வேண்டாம்! – வானிலை மையம் எச்சரிக்கை

Editor1

Editor1

Related Posts

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
இலங்கைச் செய்திகள்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.
இலங்கைச் செய்திகள்

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைச் செய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
Next Post
தென்கிழக்கு அரேபிய கடலுக்குள் செல்ல வேண்டாம்! – வானிலை மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு அரேபிய கடலுக்குள் செல்ல வேண்டாம்! - வானிலை மையம் எச்சரிக்கை

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

ஒரே வாரத்தில் 22,000 ரூபாயால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்

December 27, 2025
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

December 26, 2025
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

December 26, 2025
கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

December 26, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy