தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். சுமார் 10 கிலோ தங்க நகைகளை எப்போதும் உடம்பில் அணிந்து கொண்டிருப்பவர்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டவர் தான் ஹரி நாடார்.
இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மூன்று நடிகைகளை விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மூன்று நடிகைகள் ஸ்ரீ ரெட்டி, வனிதா விஜயகுமார் மற்றும் விஜயலட்சுமி என கூறப்படுகிறது. மேலும், இவர் தயாரித்து நடிக்கும் டுகே காதல் அழகானது என்ற படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















