இலங்கையில் வெளிநாட்டு ஈழ அரசு உருவாவதற்கு தேவையான சட்டங்களை கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் இயற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழீழமோ வெளிநாட்டவர்களின் ஈழ அரசோ உருவாக்கப்படுவதற்கு தாம் எதிரானவன் என பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கோவிட் அச்சுறுத்தலினால் நாடு முடக்கப்பட வேண்டிய சூழலில் நாட்டின் இறையாண்மையை காட்டிக் கொடுத்து, நாட்டின் ஒற்றமைக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாட்டு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் அடுத்த மூன்று நாட்களும் செயற்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.