திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு வாரங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு தீர்வாகாது எனக் கூறினீர்கள். மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு ‘‘நாளை எம்எல்ஏ-க்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறோம். மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அதன்பின் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.