ட்விட்டர் தளத்தில் சமீப காலங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புளூ டிக் அம்சம் மீண்டும் வழங்கப்படுகிறது.
சமூக வலைதள சேவைகளில் வெரிபைடு அக்கவுண்ட் பெற ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி வழிமுறைகளை கொண்டிருக்கின்றன. முன்னதாக ட்விட்டர் தளத்தில் வெரிபிகேஷன் சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும், சில பிரச்சினைகள் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது
தற்போது இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை வெரிபைடு அக்கவுண்ட் பெறுவதற்கான வழிமுறைகளை ட்விட்டர் மாற்றி அமைத்து இருக்கிறது. அதன்படி ட்விட்டரில் புளூ டிக் பெற கீழே கொடுக்கப்பட்ட அக்கவுண்ட்களில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
– அரசாங்கம்
– நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் அமைப்புகள்
– செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள்
– பொழுதுபோக்கு
– ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்
– செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர ஆளுமைகள்
இதுபோன்ற அக்கவுண்ட்கள் மட்டுமின்றி ப்ரோபைல் பெயர், புகைப்படம், உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பர் வைத்திருக்க வேண்டும். மேலும் கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். இத்துடன் ட்விட்டர் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.