பிரபல திரைப்பட தயாரிப்பாளரான பி.ஏ.ராஜு மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர், சீனியர் சினிமா பத்திரிகையாளராகவும் இருந்த இவர், சண்டிகாடு, பிரேமிக்குலு, லவ்லி, விஷகம் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் சகல நடிகர், நடிகைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது மட்டுமின்றி, சினிமா தொடர்பான தகவலை உள்ளபடி வெளியிடுபவராகவும் இருந்துள்ளார்.
இவரது திடீர் மரணத்தினால் அதிர்ச்சிக்குள்ளான தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் ராஜுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சினிமா செய்திகளை பகிர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இவரது மறைவுக்கு ராஜமவுலி, மகேஷ் பாபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்கள் #RIPSir என்றும் #RIPBaRajuGaru எனவும் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.