ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் சர்வதேச சந்தையில் புது அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 Q1 2021 காலக்கட்டத்தில் உலகின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த தகவல் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. யூனிட்கள் மற்றும் வருவாய் என இரு அடிப்படைகளிலும் ஐபோன் 12 முதலிடம் பிடித்து இருக்கிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் ஐபோன் 12 மட்டும் 5 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 4 சதவீதமும், ஐபோன் 12 ப்ரோ 3 சதவீதமும், ஐபோன் 11 மாடல் 2 சதவீதமும் பிடித்து இருக்கின்றன.
மற்ற மாடல்களான சியோமி ரெட்மி 9ஏ ஐந்தாவது இடத்திலும், ரெட்மி 9 ஆறாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஏழாவது இடமும், ரெட்மி நோட் 9 எட்டாவது இடமும், கேலக்ஸி ஏ21எஸ் மற்றும் கேலக்ஸி ஏ31 முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து இருக்கின்றன.
வருவாய் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 12 சதவீத வருவாய் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 11 உள்ளிட்ட மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா இருக்கிறது.