இலங்கையில் ஏற்பட்டு வரும் கோவிட் தொடர்பான இறப்புகளில் அதிகமானவை, நீண்டகால தொற்றா நோயுள்ளவர்கள் மத்தியிலேயே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைரஸ் அனைத்து அகவை மட்டத்தினர் மத்தியில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றா நோய் தொடர்பான சமூக மருத்துவர் கலாநிதி விந்தியா குமரபெலி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று இறப்புக்களில் 75 வீதமானவை 60 அகவைக்கும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே பதிவாகியுள்ளன.
அவர்களில் பெரும்பாலோர் நீரிழிவு நோய், இதய வியாதிகள், நீண்ட கால சுவாச பிரச்சினைகள், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்திய கலாநிதி விந்தியா குமரபெலி தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற நோய்களால் 30 முதல் 60 அகவைக்கு உட்பட்டவர்கள் மத்தியில் 80 வீதமான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
எனவே தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது சுகாதார அமைச்சின் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தொற்றாநோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என்றும் தொற்றா நோய் தொடர்பான சமூக மருத்துவர் கலாநிதி விந்தியா குமரபெலி தெரிவித்துள்ளார்.