மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.

சென்னை:
இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.
சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நகரில் போக்குவரத்து குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களால் ஏற்படும் புகை மாசு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. வேளச்சேரியில் காற்று மாசு அளவு 73-ல் இருந்து 47 ஆக குறைந்துள்ளது. ஆலந்தூரில் 39 ஆக உள்ளது.


















