கொரோனா வைரஸ் தமிழகத்தை தற்போது புரட்டியெடுத்து வருகிறது. தற்போது முழு லாக்டவுன் இருப்பதை மீறியும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்.
தமிழகத்தில் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் சாலைகளில் தடுப்புச்சுவர் வைத்து பாதுகாப்பில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சேலத்தில் தங்கைக்கு கொரோனா இருப்பதை அறிந்த அவரின் அண்ணன் செய்த செயல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
தங்கைக்கு மூச்சுத்திணறல் இருப்பதை அறிந்த அண்ணன் தங்கையை காரில் ஏற்றிய கொண்டு தனியார் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டினை இழந்து காவல்துறையினர் வைத்திருந்த சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது. சுமார் 50க்கும் மேற்பட்ட சாலை தடுப்புகள் சேதமடைந்துள்ளது.
இதையறிந்த போலிசார் சம்பவ இடத்தினை பார்த்து விசாரித்தனர். அப்போது அவர் என் தங்கைக்கும் உடல்நிலை சரியில்லை காரில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்கு காரணம் என்று கூறிவிட்டு மருத்துவமனையில் தங்கை சேர்த்துவிட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அந்த அண்ணனி பெயர் அஜித் என்று கூறப்படுகிறது. அவரை விசாரித்த போலிசார் மன்னித்து அனுப்பி வைத்துள்ளனர். அண்ணன் பாசத்துக்கு அளவே கிடையாதுனு சும்மாவா சொல்லுவாங்க.




















