யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருட்டு முயற்சியை தடுக்கச் சென்ற இளைஞன் வாள்வெட்டு தாக்குதலில் நடத்தப்பட்ட நிலையில் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில்,
நாவற்குழி – அற்புத அன்னை தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நிற்பதை அவதானித்த இளைஞன் ஒருவன், உடனடியாக தேவாலயத்திற்குள் சென்று எதற்காக நிற்கிறீர்கள்? என வினவியுள்ளான். இதன்போது சந்தேக நபர் திடீரென மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து இளைஞன் மீது வெட்டியுள்ளார்.
இதனால் கையில் படுகாயமடைந்த இளைஞன் கூச்சலிட்டதை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடியுள்ளார். அதற்குள் சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன் திருட்டு நோக்கத்தில் தேவாலயத்திற்குள் நுழைந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தேடி பிடித்து அடித்து நொருக்கியதுடன் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் நாவற்குழி ஐந்து வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த சுந்தராஜா கலிஸ்டஸ் என்ற 32 வயதுடையவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுபதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.