தமிழ் திரையுலகில்இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல். விஜய். இவர் கிரீடம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் இயக்கத்தில் தற்போது தலைவி எனும் மாபெரும் படம் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இப்படமா வெளியாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் முழுமையாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்படி கதைக்களம் அமைத்துள்ளதாம்.
மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா ஜான், மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.